Kaalamaana kaalani kavithai

காலமான காலணி
கிழித்தது காலை முள் ,
கடுமையாய் நிந்தித்தேன்
காலமாகிவிடக்
காத்திருக்கும்
காலணியை  -இத்தனை
காலமாய் - என்
கால்களுக்குக்
காவலாயிருந்த -அதன்
கடும் உழைப்பை மறந்து!
தேய்ந்து போய் இருந்தது
காலணியைவிட என் மனம்
தேட வேண்டும் வேறு
காலணிக்கு முன் - என்னுள்
கனிவான.
குணம்.
                   -வி.ஆஷாபாரதி

No comments