Mithivandi kavithai

                மிதிவண்டி

   
மிரண்டு பயத்துடன் 
மிதிவண்டி ஓட்டிய 
மைதானம் முழுவதும்
 மிதிவண்டியின் தடங்களல்ல,
மைல்கள் தூரமென்றாலும்
மறுக்காமல் -தன்
மகளுக்காக  
மின்னல் போல் ஓடிய
 ஓயாத தந்தையின் 
மகத்தான  கால்களின் தடங்கள்! -அவை
இன்றுவரை மைதானத்திலும் -என்
மனதிலும்!
-வி. ஆஷாபாரதி 

No comments