Thiyagam kavithai
தியாகம்
புலப்படுவதேயில்லை!
பட்டுப்பூச்சிகளின் தியாகம்,
பட்டாடை உடுத்தாத வரை.
பூக்களின் தியாகம்
புது வாசனைத் திரவியம்
பயன்படுத்தாத வரை
பாறை கற்களின் தியாகம்-அவை
பிளந்து மறுபடியும் மணலாக
பிறந்த அதில் -நம்
பாதங்கள்
பதியாதவரை
பூமியே
புத்தகமானாலும்
போதாது -அதன்
பக்கங்கள்,
பட்டியலிட
பலரின் தியாகங்களை !
-வி ஆஷாபாரதி
புலப்படுவதேயில்லை!
பட்டுப்பூச்சிகளின் தியாகம்,
பட்டாடை உடுத்தாத வரை.
பூக்களின் தியாகம்
புது வாசனைத் திரவியம்
பயன்படுத்தாத வரை
பாறை கற்களின் தியாகம்-அவை
பிளந்து மறுபடியும் மணலாக
பிறந்த அதில் -நம்
பாதங்கள்
பதியாதவரை
பூமியே
புத்தகமானாலும்
போதாது -அதன்
பக்கங்கள்,
பட்டியலிட
பலரின் தியாகங்களை !
-வி ஆஷாபாரதி
👌👌👌👌
ReplyDelete🤗🤗😊
ReplyDelete