Uyarntha yeni kavithai

உயர்ந்த ஏணி


எண்ணியதில்லை என்றும்
ஏணி -பலரை
ஏற்றம் காணச்செய்ததாலேயே -தான்
எழ முடியாமல்  உடைந்ததாய்!

"உடைந்தாலும் - பிறர்
உயரச் செல்ல
உறுதுணையானேன் என்ற
உயர்வோடு
உடைகிறேன்" என்றது- தன்
உயரத்தாலும்
உள்ளத்தாலும்
உயர்ந்த "ஏணி"!
                 -வி.ஆஷாபாரதி

No comments