Sarugugal kavithai

சருகுகள்

  சிறு சருக்கல்களுக்கே
  சிதைந்துவிட்டதாய் எண்ணி
  சோர்ந்து விடும் நமக்குச்,
  செத்து மடிந்த பின்னும்,
  சருகுகளாய்,
  செடிக்கு உரமாகி -அதை
  செழிக்கச் செய்து மரமாக்கும்
  சிறு இலைகள்கூட
  சொல்கிறது,
  "சிகரம் உன்
  சிரத்திற்கு அருகில் தான்"! என.
                        -வி.ஆஷாபாரதி

No comments