நாட்காட்டி
எண்ணில் நாட்களைக் காட்டி,
என்னில் உள்ளவை
என்ன வென
என்னையே நான் தேடி
எங்கும் அலைகையில்,
எண்ணற்றவை என்னுள்ளே உண்டு என
எனக்குக் காட்டி -அவற்றை
எந்நாளும் யாழென மீட்டி,
என்று முடியும் நம் நாட்கள் என
எவருக்கும் சொல்லாமல்,
எழுகிறது நமது
எண்ணற்ற
எதிர்பார்ப்புகளுடன்
என் "நாட்காட்டி"!
-வி.ஆஷாபாரதி
Post a Comment