Sannal kambigal kavithai

சன்னல் கம்பிகள்
விழிகளில்
வழிந்தோடும் கண்ணீருடன்
வழியனுப்பும்
வலி ,
விநாடிகளில் மறைந்தாலும் -பலரின்
வலியை
வாங்கிக் கொண்டே
வழியென்கிலும் பயணிக்கிறது
வழியனுப்பிய
வாகனத்தின் சன்னல் கம்பிகள்!
                    -வி.ஆஷாபாரதி

No comments