Pala naatkalaai kavithai

பல நாட்களாய்
பிரம்மாண்ட திறன்தான்!
படுத்துறங்கவே எனக்கு
பல நூறு கதைகள் கூறி,
பின்
பரிட்சியமில்லா
புது உலகிற்குப்
பிரிந்து சென்றவள் -மறந்தாவது
பயணித்தாலென்ன
பூமிக்கு ஒருமுறை!
பலனில்லை என அறிந்தும்,
பல நாட்களாய்
பழங்கதைகளும்,
புதிர் விடுகதைகளும் -அவள்
பார்வைக்கு உதவிய கண்ணாடியும்,
புள்ளிக்கோலங்களும் ,
பல நாட்கள் துள்ளித்திரிந்த வாசற்
படிகளும் நானும் !
            -வி.ஆஷாபாரதி


No comments