Vinmeenidam vendokol
விண்மீனிடம் வேண்டுகோள்
விருப்பத்தை வேண்டிக்கொள் என்றது
விண்மீன் வீழ்கையில்,
"விழ வேண்டாம் இனி
விண்மீன்கள் யாவும்! " -என்
விருப்பம் இதுவே என்றதும்
வியந்த விண்மீனிடம்
விழைந்தேன் இப்படி:
விட்டுச் சென்றவர் யாவரும்
விண்மீன்களாக !-நித்தமும்
விசாரிப்பேன் நலனை
விண்ணை நோக்கி மண்ணிலிருந்தே!
வானிலிருந்தும்
விலகிவிட்டால் -அவர்களை
வேறெங்கு காண்பேன் நான்!
விருப்பத்தைக் கேட்டு
வருத்தத்துடன்
விழுந்தது அந்த விண்மீன்!
விடையின்றி விண்ணை நோக்கியபடியே
நான்!
-வி.ஆஷாபாரதி
விருப்பத்தை வேண்டிக்கொள் என்றது
விண்மீன் வீழ்கையில்,
"விழ வேண்டாம் இனி
விண்மீன்கள் யாவும்! " -என்
விருப்பம் இதுவே என்றதும்
வியந்த விண்மீனிடம்
விழைந்தேன் இப்படி:
விட்டுச் சென்றவர் யாவரும்
விண்மீன்களாக !-நித்தமும்
விசாரிப்பேன் நலனை
விண்ணை நோக்கி மண்ணிலிருந்தே!
வானிலிருந்தும்
விலகிவிட்டால் -அவர்களை
வேறெங்கு காண்பேன் நான்!
விருப்பத்தைக் கேட்டு
வருத்தத்துடன்
விழுந்தது அந்த விண்மீன்!
விடையின்றி விண்ணை நோக்கியபடியே
நான்!
-வி.ஆஷாபாரதி
Post a Comment