Innalgal kavithai
இன்னல்கள்
இடி மின்னல் தோற்கும் -இந்த
இடைவிடா இன்னல்கள் முன்!
"இரவொன்று வந்தால் பகலொன்று வரும் "-
இஃது
இயற்கையின் நியதி -ஏனோ
இதற்கு சிலநேரம் மறதி!
இன்னல்களென்னும் இருள்
இங்கு விடியல் தர மறந்ததோ?
-எனினும் என்
" இயல்பும், இலக்கும்"
இருக்கட்டும் என்னுடனேயே!
இயன்றவரை
இவ்விருவரையும் இழக்காமல்
இன்றுவரை முயன்றுகொண்டே நான்!
-வி.ஆஷாபாரதி
இடைவிடா இன்னல்கள் முன்!
"இரவொன்று வந்தால் பகலொன்று வரும் "-
இஃது
இயற்கையின் நியதி -ஏனோ
இதற்கு சிலநேரம் மறதி!
இன்னல்களென்னும் இருள்
இங்கு விடியல் தர மறந்ததோ?
-எனினும் என்
" இயல்பும், இலக்கும்"
இருக்கட்டும் என்னுடனேயே!
இயன்றவரை
இவ்விருவரையும் இழக்காமல்
இன்றுவரை முயன்றுகொண்டே நான்!
-வி.ஆஷாபாரதி
Post a Comment