வெற்றுக் காகிதம்
மனம் அதை கனமாக்கி,
மகிழ்ச்சியை தூரமாக்கி,
மிகுதியானால் மமதையைத் தரும்
பணக்காகிதத்திற்குப் பதில்,
நாணயம் மறந்து
நல்லவை துறந்து செல்லும் சில்லறை
நாணயங்களுக்குப் பதில்,
விரும்புகிறேன்
வெற்றுக் காகிதமாக
வஞ்சகங்களில்லா அதன்
வெள்ளை மனதை பெற!
-வி.ஆஷாபாரதி
Post a Comment