WORLD DAY AGAINST CHILD LABOUR POEM
WORLD DAY AGAINST CHILD LABOUR
"கற்க கசடற"என்கிறது குறள்
கனக்கிறதே தலையில் கற்கள்
கேட்கவில்லையோ
எங்கள் கூக்குரல்!
கண்டதில்லை மைதானம்!
கால்களே இங்கு பந்துகளாய்
காலையிலிருந்து சுழல்கிறது,
கால்பந்து விளையாட்டு
இதுதானோ?
சிறந்ததாம் சிறுவர்களுக்கு
சமச்சீர் உணவு!
சில்லறைக்குக் கிட்டுவது என்னவோ
சிறுவயிறு நிரப்பி
சிறந்த செயலையாற்றும்
சில பருக்கைகளே!
"ஓடி விளையாடு பாப்பா " என்ற
ஒல்காப் புகழ் பாரதியின் வாக்கு
ஓய்ந்து விடவில்லை இன்றும்!
" சோற்றுக்குச் சண்டை "
" சிதறிய பருக்கை சேகரிப்பு" என்ற
எங்களின் அன்றாட விளையாட்டுக்களால்!
வீதிகளில் கூவி
விற்று, வீடு வருகையில்
விடிந்து விடுகிறது ,
வஞ்சகம் ஏனோ அந்த
வானிற்குக்கூட!
இப்படிக்கு
குழந்தை தொழிலாளர்கள்
-வி. ஆஷாபாரதி
SUPER HEART TOUCHING LINES
ReplyDeleteThank u
ReplyDelete