Uppalangalil uzhaipaalargal
கடும் வெயில் !
கதிரவனை
கடிந்துரைத்த படியே
குடைக்குள் நான்,
கால்கள் சற்று தூரம் பயணிக்க
பின்
கண்டேன்:
உரிந்த தோல் கொண்ட
உள்ளங்கைகளும்
வெந்திருந்த பாதங்களும்
வியர்வை சிந்தியபடியே
உப்பளங்களில்
உழைப்பாளர்கள்,
"வாழ்வாதாரம் தரும்
வெயில் வாழ்க "என்றனர்
காயங்களாக்கிய
கடும் வெயிலை
கைகூப்பி வாழ்த்திய
கரங்கள் கண்டபின்-
குடைக்குள் சுட்டெரித்த வெயில்
ஏனோ
குளிர்வது போல் இருந்தது
குடையகற்றிய பின்னும் !
கதிரவனை கடிந்துரைத்த
குற்ற உணர்வுடன் -என்
கால்கள் நகர்ந்தன அங்கிருந்து!
-வி. ஆஷாபாரதி
Aha super
ReplyDeleteThank u so much🙏🤗
ReplyDelete