INTERNATIONAL CHILDREN'S DAY POEM
கவலையறியாப் பருவம்
காலை மாலை கழியும்
கல்விச்சாலைகளிலும்
கலைகள் விளையாட்டுகளிலும்
குழந்தைப் பருவம்
என்றுதானே
கணித்துவிட்டேன் தவறாய்!
இடிதாக்கியது போல
இன்று சில புள்ளி விவரங்கள் :
இந்த
விழிகள் கண்டதில்லை
விளையாட்டு மைதானங்கள்!
விடிய விடிய தொழிற்சாலைகளில்
வெள்ளிக் காசுகள் சிலவற்றால்
வறுமையோடும் வயிற்றுப்பசியோடும்
வாதிட!
இவர்களுக்கு
கிடைக்கிறது கல்வி
கட்டணம் ஏதுமின்றி -ஏனோ
குண்டுகள் பீரங்கிகளின்
கொடூர சப்தத்தின் மத்தியில்!
குருதிக் கறை படிந்த
குடிசைகளுக்கு பெயரே -இங்கு
குழந்தைகளின் கல்விக் கூடங்கள்!
கொள்கை எனக்கூறி
காசுகளுக்குக் குழந்தைகளை
கொன்று குவிக்கும் மண்ணில்!
சர்வதேச குழந்தைகள் தினம் இன்று
சில சற்று மாறினால் தான் நன்று
உ லகெங்குமுள்ள மழலைகள்
வீதிகளில் கூவி விற்கும் சப்தம்
விலகி ஒளிக்கட்டும் -கணித
வாய்ப்பாடுகளின் சப்தமாய்!
-வி. ஆஷாபாரதி
Post a Comment