World No Tobbaco Day poem
பிரச்சாரங்கள் பல!
பதாகைகள் சில !
எண்ணற்ற கருத்தரங்குகள்!
ஏராளமான ஆலோசனைகள்!
ஏனோ ஏற்கவில்லை
எதையும் மனம்! -பலரின்
பகையினை மறந்தாலும்
பழகிப் போன
புகையிலை மறக்க
மறுக்கிறது மனம்!
பத்து வயது மகள் - அவன்
பையில் புகையிலை பார்த்ததும்
"அப்பா!
அனைவரையும் கொல்லும் உயிர்கொல்லி பிடித்த கரங்கள் தான்
என்னை
அன்புடன் அணைத்த கரங்களோ"! என்றாள்.
அந்த நொடியில் -புகையிலை
கீழே போட்ட அவன்
கரங்கள்
கடைசி வரை எடுக்கவில்லை !
-வி. ஆஷாபாரதி
Post a Comment