Maithaanathil kanneer kavithai
மைதானத்தில் கண்ணீர்
மழையில்லை
முழுவதுமாய் நீர் -அது
மைதானத்தின் கண்ணீர்!
மகிழ்ச்சி மறந்த மைதானத்தின் மடல்:
"மறைந்து விட்டன
மழலை விளையாட்டுக்கள்!
மணிக்கணக்காய்
மடிக்கணினி ,கைபேசி
மகிழ்ச்சி தருவது போல்
மழலையை
மயக்கும் மாயைகள்!
மனம் கேட்கவில்லை எனக்கு
என்னை
மறந்துவிட்ட மழலைகளால்
மாய்த்துக் கொள்ள வழியின்றி
மாறிவிட்டேன்
மாட மாளிகைகளாய்!
இப்படிக்கு
மைதானம்
-வி. ஆஷாபாரதி
Post a Comment