Refugees day poem

Refugees day poem
       
தேசத் துரோகங்களுக்கே
உள்ளன
தஞ்சம் தர சிறைகளாவது.
தேசத்தை  தொலைத்தவர்கள் 
தூக்கி எறியப்படுவதேன்?
கைதிகளுக்குக் கிட்டும் 
கவளம் உணவு கூட
அகதிகளுக்கில்லை ஏன்?
நிலம் விட்டு
நாடி வரும் இவர்களுக்கு
நித்தமும் கவலை,
 "நல்ல உணவில்லையென்பதைவிட
நாட்டின் பெயரறியாமல் -உயிர் 
நாடி நின்றுவிடுமோ?"
என்பதுதான்!
தேசம் தொலைத்து
தீண்டத்தகாதவர்களாய்
தினமும் 
திசையறியா வேற்று மண்ணில்,
தீதொன்றுமறியா அகதிகள் !
   -வி.ஆஷாபாரதி 

No comments