ஒரு தந்தையின் அன்னையர் தின வாழ்த்துகள்
அன்னையை இழந்தாலும்
ஆண்டுகள் பல கழித்து
அச்சு அசலாய் - தன்
அன்னையின் சாயலில்
அவதரித்த அவள் முகம்(மகள்)
கண்ட பின்
அந்த நாள் வரையிலிருந்த
ஆற்ற இயலாத
அத்துனை சோகங்களும்
அகன்றன! எனவே
அன்னையர் தின பரிசை கொடுத்தார்
அந்த தந்தை-தன்
அன்பு மகளிடம்!❤❤❤
(அன்னையை இழந்திருந்தாலும்
அவளின் உருவில் மட்டுமல்ல உன்னத குணத்திலும் மகள்களை பெற்ற தந்தையர்கள் அனைவருக்கும் இக் கவிதை சமர்ப்பணம்!)⚘⚘⚘🌻🌻
-வி. ஆஷாபாரதி
Post a Comment