அம்மா!
போதாது நாள் ஒன்று என்றாலும்- உன்னைபோற்றாமல் என்னால் இருத்தலாகாது.
மாதங்கள் பத்து பத்திரமாய்-என்
பாதங்கள் பூமி தொடும்வரை பக்குவமாய் - மெல்ல என்னை
பூமிக்கு அழைத்து வந்த
புனிதம் நீ!
நித்தமும் என் கனவுகளை
நித்திரை மறந்து சுமக்கும் உனக்கு -இந்த
சித்திரையில்
சிறந்த நாளாம் "இனிய அன்னையர் தின வாழ்த்துகளை" கூறுவது:
சில ஆண்டுகள் சென்றுவிட்டாலும் -என்றும் உனக்கு
சிறு குழந்தையாகவே விளங்கும் நான்!
- வி. ஆஷாபாரதி
Super
ReplyDelete