Piranthanaal vaazhthu (grandfather)

 பிறந்த நாள் வாழ்த்து


புகையை விட்டுச்செல்லும்
புகை வண்டியில்
புதிதாய் புன்னகை இன்று மட்டும்!
புரியாமல் சில நொடிகள் நின்றேன் நானும்,
பின் புரிந்தது ஒன்று _தங்கள்
பிறந்தநாள் இன்று!

வளர்த்த வேருக்கு
வாழ்த்துக் கூறும்
வேளையில்
வேர் மட்டும்  சென்றது எங்கு?
விழிகளில் சில துளி நீர்
விழுதுகளுக்கெல்லாம் இங்கு!
"விழிகளுக்கு தென்படாது _என்றும்
விலகாது விழுதுகளைவிட்டு  இந்த 'வேர்'
என் விழுதுகளின் விழிகளில் நீர் ஏன்?" _மண்ணிலிருந்து
வேகமாய் வந்தது ஒரு வேரின் குரல் .

அன்றாடம் ரயிலின் புகையை கொண்டு செல்லும்
அந்த காற்று -கொண்டு சேர்க்கட்டும் விரைவாய் இந்த
பிறந்தநாள் வாழ்த்தையும் !

தங்களுக்கு வாழ்த்துக்கள் வந்து சேர்ந்திருக்கும்  என
தேற்றிக்கொள்கிறேன் என்னை நானும்
தினமும் செல்லும் ரயில்களின் ஓசையின் மூலம்.
        -வி.ஆஷாபாரதி


No comments