Header Ads

test

Panba? arivaa? Kavithai

பண்பா ? அறிவா?
இன்முகத்துடனான அன்பு -அது
இனிதான  பண்பு
இன்னது என அறிய உதவும்,
இன்றியமையா நம் அறிவு.
இதில் உயர்ந்தது எதுவென்பதா?
இரட்டைக் கிளவி போல்
இல்லை பொருள் என்றாகுமே
இதை பிரித்தால்.
இரு விழிகளில்
இதில் ஒன்று போதும் என்போமா?
இல்லை
இரவு பகலில்
இருக்கட்டும் ஒன்று மட்டும் என
இருந்திட்டால் பூமிதான் நன்றாய்
இயங்கிடுமா?
பண்பில்லா அறிவும் பாழாகும்
பகுத்தறியும் அறிவில்லா
பண்பும் வீணாகும்
பண்பும் அறிவும்
பல மடங்கு வளர்க்கப் பழகு
பயணிக்கும் நம் பாதையில்
பரவட்டும் அதனால் அழகு
பிரிக்க முயலாமல்  ஒழுகு-அதை
பிரிக்க முனைவதிலிருந்து விலகு 
போற்றும் உன்னை இந்த உலகு.
                         -வி. ஆஷாபாரதி

 



No comments