Vettrumai kavithai

வேற்றுமை
வேர் பிடித்து
வளர்கையிலேயே
வெட்டி விட்டனவோ
வேற்றுமையை மரங்கள் !
வாழை , தென்னை
வாகை ,பனை
வேங்கை ,புங்கை என
வகைகள் தான் எத்தனை !
வாய்ப்பில்லை
வனங்களுக்கு,
வேற்றுமை மரங்களில் எனில்!
வாய்ப்பில்லை
வளமான வாழ்விற்கும்
வேற்றுமை மனித மனங்களில் எனில்!
வேருடன் சாய்க்க
வேண்டியது
வானுயர்ந்த மரங்களையல்ல,
வேதனை தரும்
வேற்றுமையைத்தான்!
                  -வி ஆஷாபாரதி




1 comment: