Kadhai

கதை
காணவில்லை
கதை சொல்ல எவரையும்,
கணினிகளின்  உலகில் !
கட்டளை யார் இட்டதோ ?
கதைகள் சொல்லும் பணியில்
கோடி விண்மீன்கள்!
கதைகள்  பல
கூறிய களைப்பிலும் -அதை யாவும்
கேட்ட களிப்பிலும்,
கண்ணுறங்கினோம்
காலையில் தான்
விண்மீன்களும் நானும்  !
                     -வி ஆஷாபாரதி


No comments