Kaippesi kavithai

கைப்பேசி

கைப்பேசியுடன் விளையாடி,
கட்செவியில் உரையாடி -இதிலிருந்து
கொஞ்சம் விலகியிருப்பவனை
காரணமின்றி  எள்ளி நகையாடி,
காண்பதையெல்லாம் புகைப் படமாக்கி,
கண்டங்கள் தாண்டியும்
கணக்கின்றி உரையாடி,
காண மறந்தோம்
கண்ணெதிரே -நம்முடன்
கலந்துரையாட ஏங்கும் மனங்களை ஓர்
கணமாவது!
கட்டுக்குள் இருக்கட்டுமே  -நம்மைக் கட்டுப்படுத்தாமல் - நாம்
கட்டியமைத்த விஞ்ஞானம்.
                    -வி ஆஷாபாரதி
          

2 comments: