Yemaattram kavithai

ஏமாற்றம்
எண்ணற்ற நம்பிக்கை! -அதை
ஏற்கும் தகுதி
எள் அளவுமில்லா இடத்தில்
ஏற்றி வைத்தது -புலப்படும்
என்றோ ஓர் நாள் -நமக்குள்
எதிர்மறை வினையாற்றி! -மனம்
ஏற்க இயலா அத்தருணமே
ஏமாற்றம்!
                     -வி.ஆஷாபாரதி



No comments