Enna manamo ithu kavithai

என்ன மனமோ இது

"எண்ணிலடங்காது "
என்பதை
எத்தனை முறை -அறிவில்
ஏற்றினாலும் ,
எண்ணத் துடிக்கும்
என் மனம்
எண்ணற்ற விண்மீன் கூட்டத்தை !
"என்ன மனமோ இது?
எங்கு சென்றதோ அறிவு!"  -என
எத்திசையிலும் நிந்தனைகள்!
என்றாலும்,
எங்காவது செல்லட்டும் மனச் சோர்வு ,
ஏற்றமடையட்டும் நாளைய வாழ்வு!
என நம்பிக்கை ஏற்றவே -விண்மீன்கள்
எண்ணியபடி நித்தமும் நான் !
                    -வி.ஆஷாபாரதி

No comments