Varuttham kavithai

வருத்தம்


வாழ்வின் மகிழ்ச்சி
வரையறையின்றி நிறுத்தம்!
வருகை தந்தது
வாடிக்கையாக வருத்தம்!
விடுமுறை
வழங்க
வேண்டுகோள்
விடுத்த படி
வாழ்வு சிலருக்கு!
விண்ணில் தங்குவதில்லை
வெகு நேரம் ,
விண்ணை  மறைக்கும்  மேகங்கள்!
விடை கொடுக்கும்
வருத்தமும்
விரைவில் !
வாழ்வில்
வசந்தம்
விட்டுச்சென்று!
                -வி.ஆஷாபாரதி





No comments