Vaanirkku or kaditham
வானிற்கு ஓர் கடிதம்
கூட்டிக் கொண்டு வா
கார்மேகங்களைக் கொஞ்சம்,
களர்நிலமாகிக்
கொண்டிருக்கும்
கழனிகள் சுவாசிக்க!
ஊசலாடும்
உயிர்களுக்கு
உன்னத நீரைத்(மழை) தூவ!
விரைந்து கூட்டிக்கொண்டு வா
விவசாயிகளின் விடியலுக்காக -கொஞ்சம்
கார்மேகமங்களை !
வானின் பதில்
விரைந்து வருகிறேன்
வாழ்வில் விடியல் தர!
கார்மேகங்களைக்
கூட்டிக்கொண்டு!
கட்டிடங்களான
கழனிகளுக்குள்- மழை
குடிவர சம்மதமா?
நதிகளை
நல்ல விலைக்கு விற்று
நீருக்கு நித்தமும் யாசகம் ஏன்?
நரம்புகள் அறுத்துவிட்டு
நல்லதொரு வீணை மீட்ட
நினைப்பது
நியாயம்தானோ?
-வி.ஆஷாபாரதி
Post a Comment