Ore ulagil kavithai

ஒரே உலகில்


 உயிரற்ற போதும், 
 உரமாகிறது
 உன்னதமான                                     
 உலர்ந்த இலைகள்!

 உயிருள்ள போதே - பிற
 உயிரோடு விளையாடும்
 நஞ்சில்  நனைந்த சில
 நெஞ்சங்கள் !
  இரண்டும்
 வாழ்வது ஏனோ
 ஒரே  உலகில்தான்!
                               -வி.ஆஷாபாரதி
   
      

No comments