Annaiyin annai kavithai

   அன்னையின் அன்னை


      "  சர்க்கரைக்கட்டி" என்பாள் என்னைச்
        செல்லமாய்,
        சிற்றெறும்பு  தூக்கிச்
        செல்லுமே என்னையென்றேன்
        சினுங்கியபடி  -அவள்
        சிகையும் மனமும்
        ஒரே வண்ணம்(வெண்மை)!
        வேண்டும் இவள் கையால்
        சிறு அன்னம்! உனக்கும்
        சிறு அன்னமிட்டவள் ,
        சென்றுவிட்டாள் என்றேன்
        சிற்றெறும்புகளிடம்,
        சிற்றோடை அங்கே
        சில நேரம்!
        சிற்றெறும்புகளின் கண்ணீரால்!
    (மறைந்தாலும் மறக்க மறுக்கும்    மனதிற்கினயவர்களை நம் மனம்)
                             -வி.ஆஷாபாரதி

        

No comments