Widows day kavithai

Widows day
    
உடைந்தவளை -மேலும் 
வளை உடைத்து,
வாக்கினால் மனமுடைத்து,
"விதவை "என
விஷ வார்த்தை உதிர்த்துவிடும் முன்
மண்ணில் அவளும் ஓர்  உயிர் என
மறந்துவிடுவதேன்?

உடைந்தவளே 
உயர்வாள்-அந்த 
உடைந்த நிலா 
உலகிற்கே ஒளியூட்டும் 
ஓர் பெளர்ணமியாவது போல!
கைம்பெண்ணை
கைகொடுத்து 
காக்க மறந்தாலும் -அவர்களை
காயப்படுத்துவதையாவது
களைவோம்!
-வி. ஆஷாபாரதி 





No comments