Saalai vibatthu kavithai
சாலை விபத்து
சாலையில் குருதி வெள்ளம்!
உயர் பிரிந்தது ஓர் நிமிடத்தில் ,
உயிரற்ற உள்ளங்கள்
ஓராயிரத்தின் மத்தியில் !
அவன்
மரணிக்கும் முன்பே
மரணித்த மனிதாபிமானம்!
மறந்தும்
மனித நேயத்தை பயன்படுத்தா
மாந்தர் கூட்டத்தின் மத்தியில் !
எந்த விபத்தில்
இறந்தது நம் மனித நேயம்?
இன்றுவரை விடை தேடிக்கொண்டே நான்!
-வி. ஆஷாபாரதி
Post a Comment