Father's Day poem

 தந்தையர் தினம்!  
     கேட்கவா ஒன்று     
  "தருவேன் வாங்கி
    தரணியில் எதுவென்கிலும்
    தயங்காமல் கேள் " என்பாய் நீ
    தேடித் தேடி -எனக்கு
    தோல்விதான் இன்றுவரை! -என்னை
    தந்த தந்தை தவிர
    தரணியில் என்ன உண்டு
    நான் கேட்க? -எனினும்  இன்று
    கேட்கிறேன் நான்  ஒன்று:
    உண்டோ
    உலகில் சுவரின்றி சித்திரம்?
    உன்
    உடல்நலத்தில்
    உதாசீனம் ஏன்
    உனக்கு? அதன்
    உள்ளிருப்பது "என் பலமும் " என்ற
    உண்மை
    உரைக்கிறேன் இன்று!
    உணர்வாய்  நீ என்ற
    உறுதியுடன்
    உன் மகளின்
    உளமார்ந்த தந்தையர் தின வாழ்த்துக்கள்!
                      -வி. ஆஷாபாரதி
 

 
     

3 comments: