International day of UN peacekeepers poem
International day of UN peacekeepers
வேற்றுகிரகவாசி பூமி வந்தான்
வேளாண்மை கற்க!
மழை வேண்டினான்
பிழையின்றி பெய்தது குண்டு மழை!
ஏர் எடுத்தான் உழுது பயிர் செய்ய
ஏனோ உழுது கொண்டிருந்தன
ஏவுகணைகளும்
ஏராளமான தோட்டாக்களும்!
நாற்று நட
நடுங்கின அவன் கரங்கள்
நதி போல் எங்கும் ரத்தச் சகதி!
உழவுக்கு உதவும் உரங்கள் தேடினான்
உயிர்கள்
ஊசலாடியபடியும்
ஊனமுற்றும் பல
உடல்கள்!
குளம் குட்டைகளாவது காணலாம் எனக்
கருதிய அவன்
கண்டதோ குருதி வெள்ளம்!
பூகோளம் என்றெண்ணிய அவன்
பார்த்ததோ ஒர் போர்களம்!
வேண்டாம் இந்த கிரகம் என
வேற்றுகிரகமே சென்றுவிட்டான்!
(வேடிக்கையாகத் தோன்றும் இக் கதை
அமைதிக்காக அன்றாடம் ஏங்கும் அகதிகள் மட்டுமின்றி அனைவருக்கும் சமர்ப்பணம்! அமைதியை நிலைநாட்ட
விரும்பும் அனைத்து நாடுகளுக்கும் இக்கதையின் மூலம்
அமைதியை அழியாமல் காக்க என்
தாழ்மையான வேண்டுகோள்!🕊🕊🕊🕊🕊)
-வி.ஆஷாபாரதி
Post a Comment