முரசு கொட்டிய
முக்கிய அறிவிப்புகளெல்லாம் -இன்று
மின்னல் வேகத்தில்
மின்னஞ்சலில்!
மைல்கள் கடந்து சென்றோம்
மதிப்பெண் வெளியீடு அன்று:
மதில்களுக்குள்ளேயே
மடிக்கணினியில்
மதிப்பெண் பட்டியல் இன்று!
கடிதத்திற்கான காத்திருப்பு
காணாமல் போகச் செய்தது
கண்ணிமைக்கும் நொடிகளில்
கட்செவியில் கலந்துரையாடல்!
கப்பல், பேருந்து பயணம்
கணிசமாய் குறைத்துவிட்டதோ
காணொலியின் வருகை!
எண்ணிலடங்கா எந்திரங்கள் -நம்
எண்ணங்களை
எங்கும் பகிர்ந்திட !
எனினும் அவற்றை
ஆக்கத்திற்கும்
அழிவிற்கும் பயன்படுத்துவது
அவரவர் அறிவை சார்ந்ததே!
-வி. ஆஷாபாரதி
Yaaaa it's true nice
ReplyDelete