மக்கும் குப்பை எழுதிய மடல்

மீத்தேன் எடுக்க வாரீர்!- என்னிடம்,
மன்றாடி கேட்கிறேன் அனுதினமும் ,
என்னை
மறுத்தும் மறந்தும் விட்டு-நாட்டின்
முதுகெலும்பை (விவசாயம்)
முறிப்பதில் 
மும்முரம்  காட்டுவதேனோ!
என்னையும் 
உரமாக்கி-விதைகளுக்கு
உயிரூட்டி,
உலகிற்கு 
உணவளிக்கும் 
உழவனின்
உயிருக்கு 
உலை  வைப்பதேனோ!
மீத்தேன் எடுக்க வாரீர் என்னிடம்!

இப்படிக்கு 
மக்கும் குப்பை 
   -வி.ஆஷாபாரதி 



No comments