Kalaippillai kavithai

களைப்பில்லை
களைப்பில்லை
காலங்களாய்
கதிரவனின் கதிர்களிலிருந்து
காத்து நின்று
கட்டணமின்றி
குடை பிடிக்கும்
மரங்களின் கால்களில்
களைப்பில்லை -
கணக்கின்றி மரங்களை வெட்டிய பின்னும் நம் கரங்களில்
களையப்படவில்லை இன்னும்
இயற்கையின் க(ம)ரங்களை வெட்டும் நம் எண்ணம்.
         -வி ஆஷாபாரதி

No comments