Udhayam kavithai
உதயம்
உடைந்தவையும்,
உதிர்ந்தவையும்,
உரமூட்டுகையில்
உருவாகும்
உன்னதமே
உதயம்!
உடைந்த கற்களின்
உதயம்,
உறுதியான கட்டிடத்திற்கு மணல் ஆகையில்!
உதிர்ந்த இலைகளின்
உதயம்,
உரமாகி மண்ணுக்கு
உயிரூட்டுவதில்!
உலகின் ஒளி,"கதிரவனின்"
உதயம் -சோம்பலை
உதிர்த்துவிட்டு ,
உதிரத்தின் நிறத்தில்
உத்வேகம் கொண்டு
உதிக்கையில்!
உலகில்,
உடைந்து,
உதிர்ந்தவையெல்லாம்
உதயமாகையில்,
உடைந்த -துயரில்
உரைந்த
உள்ளமும்,
உதயத்திற்குத்தான் -என
உளமாற
உன்னை நம்பும்
உன்னத தருணமே
உனக்கான
உதயம்!
-வி.ஆஷாபாரதி
உடைந்தவையும்,
உதிர்ந்தவையும்,
உரமூட்டுகையில்
உருவாகும்
உன்னதமே
உதயம்!
உடைந்த கற்களின்
உதயம்,
உறுதியான கட்டிடத்திற்கு மணல் ஆகையில்!
உதிர்ந்த இலைகளின்
உதயம்,
உரமாகி மண்ணுக்கு
உயிரூட்டுவதில்!
உலகின் ஒளி,"கதிரவனின்"
உதயம் -சோம்பலை
உதிர்த்துவிட்டு ,
உதிரத்தின் நிறத்தில்
உத்வேகம் கொண்டு
உதிக்கையில்!
உலகில்,
உடைந்து,
உதிர்ந்தவையெல்லாம்
உதயமாகையில்,
உடைந்த -துயரில்
உரைந்த
உள்ளமும்,
உதயத்திற்குத்தான் -என
உளமாற
உன்னை நம்பும்
உன்னத தருணமே
உனக்கான
உதயம்!
-வி.ஆஷாபாரதி
Post a Comment