Manithan enbavan kavithai

மனிதன் என்பவன்
"பறிக்கப்படுவேன்" என
பயந்து
பூக்க மறுப்பதில்லை
பூமியில் பூக்கள்!

"காயப்படுவேன்" என
கவலையில்  ஒருபோதும்இருப்பதில்லை
காய்கள்!

"கல்லெறிந்து
கொல்லப்படுவேன்" என
கவசமிட்டுக்
கனியாமல்
காய்க்குள் ஒளிந்திருந்தால்,
காலங்கள் கடந்தும் பிறந்திருக்காது
கனிகள்!

மரங்களே
மரணத்திற்கு அஞ்சாது,
மகத்தான வெற்றிக்கு
முயலும்போது,
மனிதன் என்பவன்?
                    -வி.ஆஷாபாரதி







No comments