Iruthiththolvi kavithai

இறுதித் தோல்வி
இதயம்
இடிந்து கிடக்கையில்,
இன்னல்கள்
இரு மடங்காகையில்,
இசை மீட்டுகின்றன
இனிதாய்
இலைகள் யாவும்!
"இறுதித் தோல்வி
இது "- என்பது  -என் மனதில்
இறங்கும்வரை,
இளைப்பாறாமல்
இலைகள்
இசைக் கச்சேரி!

கணக்கின்றி
கடும் விமர்சனங்கள்!
கேலிப் பேச்சுக்கள்!
கவலை
கூண்டிலடைக்கும் வேளையில்,
கரவொலிகள்
கோடி தந்து
"கடைசி தோல்வி இது" என்றன
கடல் அலைகள்  மட்டும்!

இன்னல்கள் சென்றது எங்கோ பறந்து
இயற்கையே ஆனது
இதயத்திற்கு  அருமருந்து!
               -வி.ஆஷாபாரதி










No comments