Kathaikaludan
கதைகளுடன்
கதைகளுடனேயே
கதைத்துக்கொண்டிருக்கிறேன்
நான்!
காரணம்: தன்
கவலைகள் மறந்து, மறைத்து
எனக்கு
கதை கூறுபவள்
காணவில்லை எங்கும்!
காற்றையும்,
கடலலைகளையும் ,
கூட்டிக்கொண்டு
தேடிக்கொண்டே நான்- அவள்
விண்மீனான
விவரம் அறியாமல்!
இப்போது
கவலையின்றி -அவள்
கூறிய
கதைகளுடனேயே
கதைத்துக்கொண்டிருக்கிறேன் நான்!
அந்த
கனிந்த
குரல் கேட்கிறது கதைகளுக்குள்
இன்றும்!
-வி. ஆஷாபாரதி
Post a Comment