Mittaai kadai kavithai
மிட்டாய் கடை
என்றும்
மொய்க்கும் மழலை கூட்டம்!
ஏனோ
மிக வெறிச்சோடி அந்த
மிட்டாய் கடை!
வெந்த விரல்களுடன்
வீடு வரும் மழலைகள்
வேலைப் பளுவால் சற்று
விழிமூடி உறங்குவதற்குள்
விடிந்து விடுகிறது வானம்!
கிடைத்த கூலியும்
கவளம் உணவிற்குப் போடுகிறது
கடும் சண்டை !
சிறு வயிறு நிரப்பும் சண்டைக்கு மத்தியில் -"என்னைச்
சுவைக்க வரவில்லையே" என
சோகமாய் ஏக்கத்துடன் அந்தச்
சாலையோர மிட்டாய் கடை!
-வி. ஆஷாபாரதி
Post a Comment