Kuruviyin kural kavithai

குருவியின் குரல்
குருவியின் குரல்
கைபேசியில்! 
கூர்ந்து கவனித்த பின்தான் 
கண்டேன் !
வீடுகளால் 
காட்டையிழந்து -பின்
கதிர்வீச்சால் தன்
கூட்டையிழந்து 
கெஞ்சுகிறது 
வாழ்வாதாரத்திற்கு
கைபேசியின் வாயிலாய்
என்னிடம் நித்தமும்!
கைபேசி ஒலிக்கும் தருணமெல்லாம்
கனக்கிறது என் இதயம்!
குருவியின் கூக்குரல்
இன்று
கேட்கிறது கைபேசியில் மட்டும்!  

-வி. ஆஷாபாரதி 

No comments