World Elder Abuse awareness day poem
அவன்
வருகைக்கு
வீதியையே நோக்கி
விழிமூடாமல்
வீட்டுத் திண்ணையில்
வீற்றிருப்பவளிடம் :
"விடுமுறை கிட்டவில்லை "
என்றான்
விடுமுறைச் சுற்றுலாவிற்கு
வெளிநாடு பயணித்துக்கொண்டே!
வெறுப்புடன் அவளின்
அழைப்பை துண்டிக்கும் முன்
"ஆயிரம் வேலைகளிருந்தாலும்
அன்றாட உணவருந்த
மறந்திடாதே!"என்ற
விம்முகின்ற குரலில்
விதையை விருட்சமாக்கியவள்!
ஏனோ
புரியாத கலக்கத்துடன்
வெறுமையாய் அவன்
விடுமுறை நாட்கள்!
-வி. ஆஷாபாரதி
Post a Comment