உழைப்பாளர் தின விடுமுறை
              உயரமான மலைக்குச் சென்றான்
              உணவுக்காக தேன் எடுக்க ஓர்
              உழைப்பாளி:
              உயிரைப்  பணயம் வைத்து
              சுவையான தேனை எடுத்து
              ஊர்  திரும்பினான் -
              "உணவுக்காகவே என்றாலும்
                உழைக்கும் தேனீக்களின்
               உன்னதமான உழைப்பை
               உறிஞ்சி உண்பதா?" -ஏனோ
               உள்ளுக்குள் வலித்தது !-சிறு
               உயிர்களின் உழைப்பையும்
               உயர்வாய் எண்ணிய அந்த
               உழைப்பாளிக்கு:
               ஊர் திரும்பிய பின்
               ஊரெங்கும் பூச்செடிகளை நட்டான்.
               உழைக்கும் தேனீக்களுக்காக!
         
(வேடிக்கையாக தோன்றினாலும்
  வியர்வை சிந்தும் ஒவ்வொரு
  உழைப்பாளிக்கும்,உழைப்பின்
  உன்னதத்தை உணர்ந்த அனைவருக்கும்  இக்கற்பனை கதை சமர்ப்பணம்!)🌺🌺🌺🌺🌺💐

                            -வி.ஆஷாபாரதி

             



           
              

No comments