"குளங்களையும்
கட்டிடங்களாக்கி- துளியும்
குற்ற உணர்வின்றி,
காசு பணத்தை
கைநிறைய வாரி இறைத்து,
குடங்களில் நிரப்பிக்
கொள்கிறார்கள்
குடிநீரை!
காடுகள் தாண்டி
களைப்புடன் வரும் என்னிடமில்லையே
குடிநீருக்கான கட்டணம்!" -என
குழாயிடம்
குடிநீருக்காக
கெஞ்சுகிறது - இந்த
மஞ்சள் நிற பறவை!
-வி. ஆஷாபாரதி
Fine
ReplyDelete🤗
ReplyDelete