Pookalum pattampoochiyum kavithai

பூக்களும் பட்டாம்பூச்சியும்
"பார்த்த நொடியிலேயே
பிடித்துச் செல்லப்படுகிறேன்
பறந்து  பயணிக்கும்போதும்" என
பட்டாம்பூச்சிகளும்,
"பறிக்கப்படுகிறேன் -என்
பந்தங்களிடமிருந்து(செடி) "என
பூக்களும் ,
பரிமாறிக் கொள்கின்றனவோ தங்கள்
புலம்பல்களை!
பேசிக்கொண்டே இவர்கள்
பல நேரங்களில் ஒன்றாய்!
பிரிவதில்லை இந்த நட்பு
புரிவதில்லை இவர்கள்
பேசும்  மொழிகள் நமக்கு -அதை
பயில்வதற்குள்,
பறந்துவிடுகின்றன
பட்டாம்பூச்சிகளுடன்
பகல்பொழுதுகளும்.
                 -வி ஆஷாபாரதி




2 comments: