Minvettu kavithai

மின்வெட்டு
மின்  தடை!
மன்னிப்புக் கோரி
மண்ணில் வீழ்ந்து
மணிக்கணக்கில்
மின்கம்பிகள்!
மனமில்லை மன்னிக்க எவருக்கும்!
மன்னிக்க முயன்ற
மைனாக்களின் கூட்டம் ,
மடிந்தன
மஞ்சள் அலகுள்ள தலை துண்டித்து
மண்ணில்  துடி  துடித்து!
மின்வெட்டிலும் பாய்ந்தது
மின்சாரம் என் மனதில்!
                    -வி.ஆஷாபாரதி




No comments