Kodaiyil kuruviyudan santhippu
கோடையில் குருவியுடன் ஓர் சந்திப்பு
சன்னலில் ஓர் குருவி
சற்று இளைப்பாற வந்தது.
சத்தமிட்டு விரட்டினேன்
"செல் !உன் வீட்டிற்கு " என்றேன்.
"இது என் வீடும் தான் "என்றது ஏக்கத்துடன்.
திகைத்து நின்றேன் ஓர் நொடி.
சன்னல் கதவுகள்
சட்டென மூடி திறந்தன.
சரியாக புரிந்தது எனக்கு.
காடுகள் வீடுகளாகி,
மரங்கள் யாவும்
மாளிகைகளின் கதவு சன்னல்களாய்
மாறி விட்டன!
"காட்டையே அளித்த அக்குருவிக்கு- என்
வீட்டின் சிறு சன்னலை கூட தர மறுப்பதா?"
எனக்குள் இந்த வினா சில நொடிகள்:
அன்று முதல்
அந்த குருவி
அன்றாடம் -என் வீட்டு சன்னலில். 🕊🕊🐦🐦🐥🐤
Awesone gd work keepit up
ReplyDeleteGood one yaar
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteNice
ReplyDelete